மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

குறி திணித்தல்

சோதனைகளைக் கண்டு மலைத்துப்போகும் மனிதனால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கவே முடியாது என்பது ஆதித்தமிழன் நன்கு அறிந்திருந்தான். ஆகவே அவன் தன மனதினை என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கக் கற்றிருந்தான். அந்த மன தைரியத்தை அவன் இழக்கத்தொடங்கியதும்தான் அவனது வீழ்ச்சி தொடங்கியது.தன் சிறப்பியல்புகளை இழக்கத்தொடங்கினான்.மொழி மற்றும் இனக்கலப்பு ஏற்பட்டது.அனைத்தையும் தன் இயலாமை காரணமாக ஏற்றுக்கொண்டான்.தன் இலக்கியங்களிலும் வேற்று மொழி கலப்பதை பெருமையோடு ஏற்றுக்கொண்டான். பல மொழிகளுக்குத் தாயாக தலைமையாக இருந்த மொழி சற்று அடங்கி இருந்தது.சுய நலமாகவோ அல்லது தமிழ் மேல் இருந்த பற்றின் காரணமாகவோ அப்போது வேகமாக கிளம்பிய தமிழ் பற்றை தூண்டிவிட்டு தமிழோடு அரசியலும் வளர்த்தார்கள் சிலர்.
அப்போது வெளிப்பட்ட தமிழுணர்வு மாநில அரசியல்வாதிகளுக்கு பதவிகளை அளித்ததோடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் மண்டியிட்டு ஏற்றுக்கொண்ட ஹிந்தி மொழியை தன் கட்டுக்குள்ளாகவே வைத்திருக்க செய்தது.கலைகளுக்கான மொழி தமிழ்.ஆனால் படிப்பது வேலை பார்ப்பதற்கு மட்டுமே என்ற எண்ணம் வந்துவிட்டதால் தமிழனின் மொழியுணர்வு குறையவாரம்பித்தது.ஆங்கிலத்தில் படிப்போர் எண்ணிக்கை பெருகியது.தமிழ் ஏழைகளின் மொழியானது.தமிழ் உணர்வினை பெருகச்செய்து ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியும் வந்து வந்து போனது.ஏதோ அவர்களால் முடிந்தவற்றை மொழிக்காக செய்தார்கள்.ஆனால் அவர்கள் மாநிலத்தை ஆளும்போதே அவர்களின் கூட்டணி ஆட்சி மத்தியில் நடக்கும்போது இந்திய பணத்தின் குறியீட்டை ஒரு தமிழன் ,எந்த மொழியின் சர்வாதிகாரத்தை ஒடுக்க தன் மொழியினர் அன்றும் இன்றும் பாடுபடுகின்றனரோ , அதே மொழியின் சாயலில் அமைத்து தமிழை தலை குனிய வைத்துவிட்டான்.அந்த குறியை ஏற்றுக்கொள்வது ஹிந்தி திணிப்பை ஏற்பதற்கு சமம்.ஆனால், இதுகூட தற்போதுள்ள தமிழனுக்குப் புரியாமல் கலப்பு மொழியர்களின் ஆளுமைக்கு அடங்கி அவர்களின் கருத்துக்களை ஏற்று இதற்கும் ஒரு பாராட்டு விழா நடத்திக்கொண்டிருக்கிறான்.எந்த அரசியல்வாதியும் எந்த தமிழ் ஆர்வலர்களும் கூட இந்த அருவெறுப்பான "குறிதிணித்தல்" பற்றி கவனம் கொள்ளாதது ஏனோ?